×

காங்கிரஸ் காரிய கமிட்டி சனிக்கிழமை கூடுகிறது

கொரோனா சூழல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரசின் உயர்மட்ட குழுவான காரிய கமிட்டி கூட்டம் வரும் 17ம் தேதி கூடுவதாக அக்கட்சித் தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் மற்றும் தொற்று பரவலை தடுக்க அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags : Congressional Correation Committee , The Congressional Working Committee meets on Saturday
× RELATED தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் ரூ.855 கோடிக்கு மது விற்பனை