திறமையான இளைஞர்களின் தேவை அதிகமாகி விட்டது: பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக சங்கங்களின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணை வேந்தர்களுக்கான தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.இதில்,  பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அவர பேசுகையில்,  “ஜனநாயகத்தின் தாயாக இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதன் மதிப்புகள் நமது வாழ்வோடு ஒன்றியுள்ளன. மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை கடந்தாண்டு கொண்டு வந்தது.

உலகளாவிய வரையறையின்படி தேசிய கல்வி கொள்கையானது இந்தியாவின் எதிர்காலமாகும். இந்தியா சுயசார்பு பாதையில் சென்று கொண்டிருக்கும்போது திறமை வாய்ந்த இளைஞர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,” என்றார். இதில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் மற்றும் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: