பயன்படாத காஸ் சிலிண்டரில் கோயில் உண்டியல் வடிவமைப்பு பொதுமக்கள் பாராட்டு கண்ணமங்கலம் அருகே இளைஞர்கள் சிந்தனை

கண்ணமங்கலம், மார்ச் 26: கண்ணமங்கலம் அடுத்த 5புத்தூர் பிள்ளையார் கோயிலில் பயன்படாத வீட்டு உபயோக காஸ் சிலிண்டரில் கோயில் உண்டியலை வடிவமைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.பொதுவாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல், இருக்கின்ற பொருட்களை கொண்டு தங்களுக்கு தேவையானதை வடிவமைத்து கொள்வார்கள். இதில், அவர்கள் செய்யும் பல பொருட்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கும். இந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருசூக 5புத்தூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள உண்டியல் வேறு எங்கும் இல்லாத வகையில் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.பொதுவாக கோயில் உண்டியல்கள் சிமெண்ட் சுவர் அல்லது ஸ்டீல், அலுமினியம், பித்தளை உலோகங்களில் செய்வது வழக்கம். இவ்வாறு புதிய உண்டியல் செய்தால் அதிக செலவாகும் என யோசித்த கிராம இளைஞர்கள், செலவில்லாமல் உண்டியல் செய்ய முடியுமா என யோசித்தார்கள். அப்போது, அங்கு பயன்படுத்தமுடியாமல் இருந்த பழைய வீட்டு உபயோக காஸ் சிலிண்டரில் உண்டியல் செய்தால் பாதுகாப்பாகவும் இருக்கும், செலவும் இருக்காது என முடிவெடுத்து, அவ்வாறே செய்து கோயில் வாயிலில் இளைஞர்கள் பொருத்தினார்கள். இச்செயலை பார்த்த பொதுமக்கள் இளைஞர்களை வில்லேஜ் விஞ்ஞானிகள் என பாராட்டி வருகின்றனர். அந்த வழியாக வருபவர்கள் ஆச்சரியத்துடன் உண்டியலை பார்த்து செல்கின்றனர்….

The post பயன்படாத காஸ் சிலிண்டரில் கோயில் உண்டியல் வடிவமைப்பு பொதுமக்கள் பாராட்டு கண்ணமங்கலம் அருகே இளைஞர்கள் சிந்தனை appeared first on Dinakaran.

Related Stories: