வானிலை அறிவிப்பில் இந்தி திணிப்பு ! மத்திய அரசு அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

சென்னை: சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு விவரங்கள் முதல் முறையாக இந்தியில் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய பெயர்களை தொடர்ந்து வழக்கமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறும் வானிலை முன்னறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை வானிலை மையத்தில் இந்தி பேசும் பணியாளர்கள் பெருகிவிட்டதால் இந்தியில் அறிவிப்பு வெளியானதாக உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு, ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகத்தில் இந்தி திணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்களை பற்றி, மக்களின் வளர்ச்சி பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. இந்தி திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சியிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்.

ஓர் வானிலை அறிக்கையை மாநில மொழியிலோ, அல்லது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான ஆங்கில மொழியிலோ வெளியிடுவதை விட்டுவிட்டு யாருக்குமே புரியாத இந்தி மொழியில் வெளியிடுவதானால் அவர்களுக்கு அந்த மாநில மக்கள் மீது அக்கறை இல்லை, இந்தி பேசாத மாநிலங்களை புறக்கணிக்கிறார்கள் என்பதே அர்த்தம் என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், சென்னை வானிலை மையத்தில் இந்தி பேசும் பணியாளர்கள் பெருகிவிட்டதால் இந்தியில் அறிவிப்பு வெளியானதாக உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>