கடலூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் இருந்து புவனகிரிக்கு மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுப்பு !

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புவனகியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் என்பவர் ஜாஹிர் உசேன் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அரசு பிணவறையில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

இதனையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(51) என்பவரும் கொரோனா தொற்று அறிகுறியுடன்  கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவு வராமல் இருந்தது. அவரும் நேற்றிரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலை அரசு பிணவறையில் பாதுகாத்து வைத்திருந்தனர். இந்த நிலையில், இருவரது உறவினர்கள் உடல்களை வாங்க வந்தபோது உடல்களை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஜாஹிர் உசேன் உடலுக்கு பதில் ஆறுமுகம் உடலையும், ஆறுமுகம் உடலுக்கு பதில் ஜாஹிர் உசேன் உடலையும் மாற்றிக் கொடுக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு தொற்று நீங்கியதால் அவரது முகத்தை பார்க்க உறவினர்கள் பிரித்தனர். இதனையடுத்து, உடல் மாறியதை அடுத்து, புகார் அளித்து மறியலில் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில், பண்ருட்டியில் இருந்து புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்ட ஜாஹிர் உசேன் என்பவரின் உடல் தோற்றி எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>