தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில்

ஒடுகத்தூர், மார்ச். 26: ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. அதேபோல், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே தீ விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால், தீயில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் ஒடுகத்தூர் தீயணைப்பு துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஷாகிதாபேகம் தலைமை தாங்கினார். இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் பட்டுசீனிவாசன்(பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றினால் அதனை எவ்வாறு அணைப்பது என்று செயல் விளக்கம் அளித்தனர். மேலும், வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டால் அனைத்து ஜன்னல்கள், கதவுகள் திறந்து வைக்க வேண்டும், அதற்கு மாறாக மின் விளக்கு ஸ்விச் போடுவதோ, டார்ச் லைட் அடிப்பதோ, செல்போன் பயன்படுத்துவதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது, கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது….

The post தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: