×

சுனாமி வேகத்தில் தாக்கும் 2ம் அலை: இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 1.84 லட்சம் பேர் பாதிப்பு; 1027 பேர் பலி....மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.!!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.71 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.38 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,84,372 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1027 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,339 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,23,36,036 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13,65,704 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 88.92% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.24% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 9.84% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,46,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



Tags : Corona ,India ,Federal Health Department , 2nd wave of tsunami: 1.84 lakh people affected by corona in one day in India; 1027 people killed .... Federal Health Department report. !!!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...