×

தமிழ்நாடு, கேளரா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து.!!!

டெல்லி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜொ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இந்நாளை விழாவாக கொண்டாடுகின்றனர். தமிழ்  மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது.

அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் மக்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜொ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய், விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.Tags : New Year ,Tamil Nadu ,US President Joe Biden , New Year Celebration in States including Tamil Nadu and Kerala: US President Joe Biden wishes people from all walks of life !!!
× RELATED இக்கட்டான நேரத்தில் உதவி எனக்கு நீ;...