×

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்: தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து.!!!!

டெல்லி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும்  உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து  ஒளிரட்டும். புத்தாண்டு, ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும்,  மகிழ்ச்சியையும் நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிராத்திக்கிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.Tags : Modi ,Tamil New Year , May the greatness of Tamil culture continue to shine: Prime Minister Modi wishes the people of Tamil Nadu a Happy New Year in Tamil. !!!!
× RELATED கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக...