எல்லையில் பாக்.கின் துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டதால் டுமீல் டுமீல் நின்றது... டும்டும் துவங்கியது: ஜம்முவில் களைகட்டும் திருமணங்கள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர். இதன் காரணமாக எல்லையோர கிராம மக்கள் உயிருக்கு பயந்து அச்சத்தோடு இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் இந்தியா -பாகிஸ்தான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், 2003ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றுவது எனவும், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவது என்றும் ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் முற்றிலும் இல்லாத நிலையில் இங்குள்ள  கிராம மக்கள் அமைதியான வாழ்க்கை முறைக்கு திரும்பி உள்ளனர். மேலும், பல ஆண்டுகளுக்கு பின் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

பொதுவாக திருமணத்தின் போது மேளம் அடிப்பதும், நடனமாடி மகிழ்வதும் பிரதான இடம் வகிக்கும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த கொண்டாட்டங்களை மக்கள் மறந்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த கொண்டாட்டங்களை மக்கள் உற்சாகத்தோடு தொடங்கி இருக்கின்றனர். பூஞ்சில் காக்ரியா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்போம். எப்போது குண்டு பாயும், எப்போது வீடுகள் சேதமடையும் என்ற அச்சத்திலேயே இருப்போம். ஆனால், தற்போது பயமின்றி வெளியே நடமாடவும், விழாக்களை கொண்டாடும் மனநிலைமைக்கும் மாறியுள்ளோம்” என்றனர்.

Related Stories: