சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் அதிமுகவின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், சாலை பெயர் மாற்ற திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு தமிழக தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

40 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிப்போன ஈவெரா நெடுஞ்சாலை என்ற பெயர் மாற்றத்தை தடுக்கும் முதுகெலும்பு கொண்ட எவரும் ஆளும் தரப்பில் இல்லையா? - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

சமீபகாலமாக, தமிழர்கள் மீதும் தமிழக கலாச்சார, பண்பாட்டின் மீதும் படையெடுப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் மத்திய பாஜ அரசு நடத்தி வருகிறது. - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories:

>