சில்லி பாயின்ட்....

* கண்ணாடி தொட்டியை சுத்தம் செய்யும்போது கையில் காயம் அடைந்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு மார்ச் 29ல் லண்டனில் அறுவைசிகிச்சை நடந்தது. தற்போது ஓய்வில் இருப்பதால் ராஜஸ்தான் அணிக்காக அவரால் விளையாட முடியவில்லை. காயம் ஆறிவரும் நிலையில், இலகுவான பயிற்சிகளை செய்ய ஆர்ச்சருக்கு மருத்துவக்குழு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லையாம்.

* நியூசி. கேப்டனும், சன்ரைசர்ஸ் வீரருமான கேன் வில்லியம்சன்,  2020-21ல் சிறந்த நியூசிலாந்து வீரருக்கான ‘சர் ரிச்சர் ஹாட்லீ’ பதக்கத்தை 4வது முறையாக வென்றுள்ளார். டி20, ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக அறிமுக வீரர் டெவோன் கான்வே, சிறந்த வீராங்கனையாக அமெலீயா கெர் விருது பெற்றுள்ளனர்.

* ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் டானில் மெத்வேதவுக்கு (2வது ரேங்க்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொனாகோ நாட்டில்  நடைபெறும் ரோலக்ஸ் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். போட்டிக்கு முன்பு தொற்று கண்டறியப்பட்டள்ளதால் அங்கேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், டென்னிஸ் சங்க மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பிலும் உள்ளார்.

* இந்தியா ஏ அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏ அணி வீரர்கள் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினருடன் இணைந்து இங்கிலாந்து செல்ல உள்ளனர். அங்கு 2 அணிகளாகப் பிரிந்து 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடவும் (4 நாள் ஆட்டம்) திட்டமிட்டுள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (ஆக. - செப்.) நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய தடகள வீராங்கனை (நடை போட்டி) பிரியங்காவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

* கடந்த மாதத்தின் ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய வேகம் புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார்.

* இந்தியன் ஓபன் சூப்பர் 500 பேட்மின்டன் தொடரில் பங்கேற்பதை (மே 11-16) ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), நம்பர் 1 வீரர் கென்டோ மொமோடோ (ஜப்பான்) உறுதி செய்துள்ளனர். இந்த தொடர் பூட்டிய அரங்கில் பார்வையாளர்கள் இன்று நடைபெற உள்ளது.

*  இந்திய ஹாக்கி அணி முன்னாள் நட்சத்திரம் பல்பிர் சிங் ஜூனியர் (88 வயது), சண்டிகரில் நேற்று காலமானார்.

Related Stories: