×

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

சென்னை: ஆவடி டேங்க் பேட்டரி பகுதியை சேர்ந்தவர் டேனியல்(33). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு செம்மஞ்சேரியை ேசர்ந்த ராஜசேகர்(39)  மற்றும் அவரது மனைவி சதா(எ)பீலா ஜோஸ்லி(33) ஆகியோர் பழக்கம் கிடைத்தது. அதில் அவர்கள் எங்களுக்கு மின் வாரியத்தில் உயர் அதிகாரிகள் பலர் தெரியும். இதனால் உனக்கு நாங்கள் வேலை வாங்கி தருகிறோம் என்று உறுதி அளித்தனர். அதன்படி நான் 7 லட்சத்தை இருவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் சொன்னப்படி எனக்கு வேலை வாங்கி தரவில்லை. உடனே நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, இருவரும் என்னை கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தம்பதியிடம் இருந்து 7 லட்சம் பணத்தை  பெற்று வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராஜசேகர், சதா உடன்  கணவன் மனைவி போல் ஒன்றாக சில ஆண்டுகளாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. ராஜசேகர் மீது கொலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. ராஜசேகர், சதா உடன் இணைந்து டேனியல் உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்களிடம் எங்களுக்கு அரசு அதிகாரிகள் பலர் தெரியும் என்று கூறி தொடர் மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகர் மற்றும் சதாவை கைது செய்தனர்.

Tags : Couple arrested for swindling Rs 7 lakh
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...