×

திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரேனா தடுப்பூசிகள் போடும் பணி துவங்கப்பட்டது.
திருப்போரூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது.

திருப்போரூரில் உள்ள அறிஞர் அண்ணா சமூக நலக்கூடத்தில் நடந்த முகாமில் செயல் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலையில் பேரூராட்சியில் பணியாற்றும் 60க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  கோவாக்சின் தடுப்பூசி  போடப்பட்டது. முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் ஆதார் எண், முகவரி, செல்போன் எண் ஆகியவை சேகரித்து இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும்   100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags : Thiruporur municipality , Commencement of corona vaccination work in Thiruporur municipality
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்