×

வாகன விபத்தில் தந்தை, மகன் பலி

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேசப்ப ரெட்டி (60). இவரது மகன் லோகநாதன் (40). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தேசப்ப ரெட்டி, லோகநாதனுடன் பைக்கில், தங்களது ேதாட்டத்துக்கு புறப்பட்டனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புழல்: செங்குன்றம் ஜவகர்லால் நேரு நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஷாலினி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன் தினம் மாலை ஷாலினி, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சைக்கிளில் புறப்பட்டார். அப்போது செங்குன்றத்தில் இருந்து அலமாதி நோக்கி வந்த வேன், சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாணவி, வேனின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானாள். புகாரின்படி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (34). பிரபல ஓட்டல் ஊழியர். நேற்று முன்தினம் இரவு பரத்குமார், வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அம்பத்தூர் - திருமுல்லைவாயல் ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சாரரயில் இவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புகாரின்படி ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை: கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் ஜோன்ராஜ் (27). நேற்று முன்தினம் இரவு சென்னை கிண்டியில் இருந்து காரில் கும்மிடிப்பூண்டிக்கு  புறப்பட்டார். வடபழனி 100 அடி சாலையில் சென்றபோது, பிச்சைக்காரர் ஒருவர் மீது  கார்மோதியது. இதில் பிச்சைக்காரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.


Tags : Father, son killed in car accident
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்