சிறைக்கைதிகள் குடும்பத்தினரை கூடுதல் முறை சந்திக்க இயலுமா? சிறைத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி

புதுடெல்லி: சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினர், வக்கீல்களுடனான சந்திப்புகளின் எண்ணிக்கையை நான்காக உயர்த்த இயலுமா என உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கலவர வழக்கு தொடர்பாக ஜேஎன்யு பல்கலையை சேர்ந்த நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் பிஞ்சாரா தோட் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள்  இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். அதில்,  சிறையில் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வக்கீல்களை நேரில்  சந்தித்து பேசவோ அல்லது ஆன்லைன் வழியவே சந்தித்து பேசுவதை தேர்வு செய்யும் வசதிக்கு அனுமதி அளிக்குமாறு  சிறைத்துறை இயக்குநர் ஜெரனலுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங், சிறை வளாகத்தினுள் உரிய கோவிட் முன்னெச்சரிக்கை, சமூக இடைவெளி பராமரிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கைதிகள் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசும் எண்ணிக்கை தற்போது மூன்றாக உள்ளதை நான்காக உயர்த்த முடியுமா? என கேள்வி எழுப்பினார். ஏனெனில், கைதிகளின் குடும்பத்தினர் அனைவரிடத்திலும் கேட்ஜெட், இணையவசதி இருக்கும் என கூற முடியாது.

எனவே, நேரடி சந்திப்பு எண்ணிக்கை அதிகரிக்க இயலுமா என்றார். அப்போது, சிறைத்துறை இயக்குநர் ஜெனரலின் சார்பில் ஆஜரான டெல்லி அரசு கூடுதல் வக்கீல் கவுதம் நாராயன்  கூறுகையில்,  கைதிகள் தங்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசும் நிகழ்வு 8 ஆக இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக அவை மூன்றாக குறைக்கப்பட்டது. அதன்பின் நிலைமை சீரடைந்த பின் மீண்டும் உயர்த்தி அதன்பின் நிறுத்தப்பட்டது.  தற்போது ஆன்லைன் வழியே பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் நேரடி சந்திப்புகளுக்கு அனுமதிக்கப்படும் என்றார்.

Related Stories: