×

சிறப்பு எஸ்ஐக்கு கொரோனா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றுபவர்  சிவகிருஷ்ணன் (53). கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தம், சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நேற்று முன்தினம் இரவு  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் உத்திரமேரூர் காவல் நிலையம் முழுவதும் பேரூராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக காவல் நிலையத்துக்குள் பொது மக்கள் வர தடை விதிக்கப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில், பொது மக்களிடம் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona to Special SI
× RELATED கொரோனா பாதித்து குணமடைந்த சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு