சம்பவமே நடக்காத நிலையில் மனுதாரர் மீதான கொலை வழக்குக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதேஷ் சியாம் சந்தக். இவரது உறவினர் நந்த் கிஷோர் சந்தக். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். 2017 ஜூலை 22ம் தேதி நந்த் கிஷோரின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை கடையை திறக்கச் சொல்லியும் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, ஏழுகிணறு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்படி, ராதேஷ் சியாம் சந்தக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கொலை, கூட்டுச்சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், புகாரில் உள்நோக்கம் உள்ளது எனக்கூறி தன்மீதான கொலை வழக்கை ரத்து செய்யுமாறு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகனகிருஷ்ணன், இ.அசோக்குமார் ஆஜராகி, உயிரிழப்பே இல்லாத நிலையில் எப்படி கொலை வழக்கு பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் மீது 21வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: