×

கர்ணன் கொண்டாட வேண்டிய படம் கொடியன்குளம் கலவரம் அதிமுக ஆட்சியில் நடந்தது: உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், தி வி கிரியேஷன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன்.அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Karnan ,Kodyankulum , Karnan's film to be celebrated Kodiyankulam riots took place during the AIADMK regime: Udayanithi Stalin's tweet
× RELATED கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு