மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நாளை துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொரோனா பரவல் எதிரொலியாக கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. எனினும் சுவாமி, அம்மன் தரிசனத்திற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் நாள் கொடியேற்றம் நாளை நடக்கிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரை, பகல் 11.30 முதல் 12.30 மணி வரை, மாலையில் 4 முதல் 5.30 மணி வரை, இரவு 7.30 முதல் 9 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஏப். 16ம் தேதி 2ம் நாள் திருவிழா துவங்கி ஏப். 21ம் தேதி வரையிலும் 23ம் தேதி திக்கு விஜயம் நாளிலும் காலையில் 6 மணி முதல் 8 வரையிலும், காலை 9 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4 முதல் 5.30 வரையிலும், இரவு 7 முதல் 9 வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஏப். 22ல், பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 6 முதல் 8 மணி வரையும், 9 முதல் 12.30 மணி வரையும், மாலையில் 4 முதல் 6.30 வரையும் தரிசனம் செய்யலாம். ஏப். 25 சட்டத்தேர் நிகழ்ச்சியில் காலை 7 முதல் பகல் 12.30 வரையும், மாலை 4 முதல் 5.30 வரையும், இரவு 7.30 முதல் 9 வரையும் தரிசன அனுமதி உண்டு. கடைசி நாளான ஏப். 26ல் காலை 7 முதல் 10.30 வரையும், மாலை 4 முதல் 5.30 வரையும், இரவு 7.30 முதல் 9 வரையும் தரிசனம் செய்யலாம்.

* திருமண கோலம் தரிசிக்கலாம்

சித்திரை விழாவில் ஏப்.24ல் 10ம் திருநாளாகும். கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் அன்று காலை 8.30 முதல் 9 மணி வரை திருக்கல்யாணம் நடக்கிறது. 9.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் இங்கு திருமண கோலத்தில் சுவாமி, அம்மனை தரிசிக்கலாம். மாலை 3.30 முதல் 5.30 மணி வரை, இரவு 7.30 முதல் 9 மணி வரையும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

Related Stories: