ஊட்டியில் நாளை குதிரை பந்தயம் துவக்கம்

ஊட்டி: கோடை சீசனின்போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் குதிரை பந்தயமும் ஒன்றும். இதற்காக பெங்களூர், பூனா, ஆந்திரா உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 40 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் பயிற்சியாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். கொரோனா பரவல் எதிரொலியாக வழக்கமான போட்டிகள் நடத்த திட்டமிட்ட போதிலும் இம்முறை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என மெட்ராஸ் ரேஸ் கிளப் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் இரு மாதங்கள் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை நாளை (14ம் தேதி) துவங்கி ஒன்றரை மாதங்கள் இப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல், அனைத்து போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஆனால் அவற்றை காண சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அனுமதி இல்லை,’’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: