சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவுநீரை கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு எடுத்துள்ள முடிவுக்கு அதன் அண்டைநாடுகள் எதிர்ப்பு

டோக்கியோ: சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவுநீரை கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு எடுத்துள்ள முடிவுக்கு அதன் அண்டைநாடுகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜப்பானில் பூகம்பத்தால் சேதமடைந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத ஃபுக்குஷிமா அணு உலையில் தேங்கியிருந்த கழிவுநீரை கடலில் கலந்து விட திட்டமிட்ட  ஜப்பான் அரசு கடந்த சில நாட்களாக ஆண்டுகளாக கழிவுநீரை சுத்திகரித்து வந்தது.

அந்த பணிகள் நிறைவுற்றதையடுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் சிறிது சிறிதாக 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசுபிக் கடலில் கலக்க முடிவுசெய்துள்ளது. இதற்க்கு இயற்க்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆபத்து ஏற்படாத அளவுக்கு அணு உலை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதனிடையே கழிவுநீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசுக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, பிரதமர் சுகா தலைமையிலான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டோக்கியோவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அண்டைநாடான தென் கொரியாவும் கழிவுநீரைக்காலில் கலக்கும் ஜப்பானின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அணு உலை கழிவுநீரால் கடல் வளம் பாதிக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. இதனிடையே அணுஉலையில் உள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் ஃபுக்குஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்க செய்ய முடியும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பனி தொடங்கும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

Related Stories: