கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்

டெல்லி: கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து ஏராளமான புலம் பெயர் தொழிலார்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளார்.

குறிப்பாக மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்கள் உடமைகளுடன் குடும்பம் குடும்பமாக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் முறை அமலில் இருப்பதால் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை என்றும், இதனால் தாங்கள் கடும் அவதிக்குளாகி இருப்பதாக புலம் பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் கால் நடையாக நடந்து சொந்த ஊர்களுக்கு திரும்பின. தற்போதும் அதே போன்று ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளார்.

Related Stories: