ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் கண்டனம்: Grand Western Trunk Road பெயர் பலகை கருப்பு மையால் அழிப்பு.!!!!

சென்னை: சென்னையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு பெயர் அளிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டினார். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதற்கும் திராவிடக்கழக தலைவர் கி. வீரமணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என்று மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து Grand Western Trunk Road என்ற பெயர் பலகையை திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். இருப்பினும், பெரியார் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழக அரசு பெயர் பலகையை மாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: