கோவில்களில் உள்ள மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி: இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை

சென்னை:கோவில்களில் உள்ள மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கோவில்களில் 100 சதுர மீட்டருக்கு 20 பக்தர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுக்கு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் கோவில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கோவில்களில் திருமணம் நடைபெறும் போது 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்றும், கோவில் திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெறும் போது 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்தில் தான் கோவிலுக்குள் வந்து திருமணத்திற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கோவிலுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும், கோவிலினுடைய அத்தியாவசிய பூஜைகளில் மட்டும் கலந்து கொள்ளவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான் (31-08-2020) அன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் பொதுமக்கள் வழிபாடுக்காக இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதியில்லை என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக 100 சதுராமீட்டர், அல்லது 1,075 சதுராடிக்கு  20 பக்த்தர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திருமணமண்டபங்களில் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் 50 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>