பெரியார் ஈ.வெ.ரா.சாலையின் பெயரை தமிழக அரசு மாற்றியதா ? :மாநில நெடுஞ்சாலை துறை பெயர் பலகையால் சர்ச்சை!!

சென்னை : சென்னையில் உள்ள மிக பிரதான சாலைகளில் ஒன்றான பெரியார் ஈ.வெ.ரா.சாலையின் பெயரை தமிழக அரசு மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாக செல்லும் 14 கிலோ மீட்டருக்கு சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்கு பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று மாநில நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும்  கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் பட்டியலிலும் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்ற பெயர் இடம் பெறவில்லை. ஆனால் இந்த சர்ச்சை குறித்து சென்னை மாநகராட்சியோ மாநில நெடுஞ்சாலைத் துறையோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

Related Stories: