வீட்டு குறிப்புகள்

*     மாலையில் குழந்தைகளுக்கு எளிய டிபன் செய்து கொடுப்பதற்கு ஒரு கப் ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து அதில் 1 கப் மைதா, ஒன்றரை கப் சர்க்கரையை திடமாக கட்டியில்லாத கலவையாக கலக்க வேண்டும். இதனை ஸ்பூனில் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான ரவா பணியாரம் கிடைக்கும்.

*     கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடியை கலந்து மினி இட்லியை கடாயில் போட்டு தாளித்து எடுத்து கொடுத்தால் இட்லியை வெறுக்கும் குழந்தைகளும் ஆர்வமாக உண்பார்கள்.

*     காலி பிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுத்து அவற்றை வினிக்கர் அல்லது உப்பு திரவத்தில் 10 நிமிடம் வைத்து பின்பு பலமுறை கழுவி பயன்படுத்தலாம்.

*     கொத்தமல்லி தழை கெடாமல் இருக்க வேர்பகுதியை நீக்கிவிட்டு சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கட் ெசய்து எடுத்து அதை டிஸ்யூ பேப்பர் அல்லது காற்று புகும் காட்டன் துணியிலோ சுற்றி பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கலாம்.

*     பிளாஸ்க் உள்பகுதியில் ஏற்படும் துர்வாடையை அகற்ற நன்றாக கழுவிய பின்னர்  சில துளி எலுமிச்சை சாறு கலந்த வெண்ணீரை உள்ளே விட்டு சிறிது நேரம் வைத்திருந்து சுத்தப்படுத்தலாம்.

*     உடல் எடையை குறைக்க விரும்பு பவர்கள் குடைமிளகாயை அவ்வப்போது உணவில் சேர்க்கலாம். இதில் வைட்டமின் சி, ஏ, ஈ பி6 சத்துக்கள் உள்ளன.

*     பாலை காயவைக்கும் முன் அதற்கான பாத்திரத்தை முதலில் நன்கு குளிர்ந்த நீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி காய்ச்சினால் அடிப் பகுதியில் ஒட்டாது.

*     கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*     கோடை வெப்பத்தால் ஏற்படும் அடி வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவைகளை தவிர்க்க வெள்ளரி பிஞ்சை துண்டுகளாக நறுக்கி அதில், வறுத்து பொடி செய்த சிறிதளவு சீரகம், தயிர், கல் உப்பு ஆகியவற்றை இணைத்து மிக்சியில் அடித்து தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

*     கோவைக்காயை சாலட்டாகவோ கூட்டாகவோ அடிக்கடி சேர்த்துக் ெகாள்வதால் கோடை கால நோய்கள் தாக்காது. நீர் நன்றாக பிரியும்.

*     அடைமாவு தயாரிக்கும் போது தண்ணீர் அதிகரித்து விட்டால் கான்பிளக்ஸ் தூளை அடைமாவுடன் கலந்தால் கெட்டியாகும்.

*    உளுந்தவடை மாவுடன் சிறிதளவு சேமியாவை பொடியாக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

*    டிகாஷன் காபி தயாரித்து குடிப்பவர்கள் டிகாஷனை சூடாக்கி பாலுடன் சேர்த்தால் சுவை கூடும்.

*    பலாக்கொட்டையை சுவையாக சாப்பிட அதனை வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, காயம், தேங்காய் துருவல். மல்லி இலை சேர்த்து வதக்கினால் சுண்டல் போல்  இருக்கும்.

*    சப்பாத்திக்கு குருமா தயாரிக்கும் போது அதில் சிறிதளவு திராட்சை, கிஸ்மிஸ் பழம், பைனாப்பிள் துண்டுகளை சேர்த்தால் நவரத்தின குருமாவாக மாறிவிடும்.

*     அரிசி உப்புமா அல்லது கோதுமை உப்பு மா தயாரிக்கும் போது அதில் சிறிதளவு ஏற்கனவே வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தயாரித்தால் சுவை கூடும்.

*    மாதம் ஒருமுறை பிரிட்ஜ்ஜில்  உள்ள பொருட்களை வெளியே வைத்து சுத்தம் செய்தால் பிரிட்ஜில் தேவையற்ற துர்வாடை வராது.

*     கோடை நேர வியர்வை மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் தங்களது படுக்கை மற்றும் விரிப்புகளை 4 நாட்களுக்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்வது நல்லது.

Related Stories: