திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமியை 12 பேர் பலாத்காரம் செய்த கொடூரம் : மத்திய அரசு அதிகாரி உட்பட 11 பேர் அதிரடி கைது

நாமக்கல் : திருச்செங்கோடு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக, மத்திய அரசு அதிகாரி உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா வட்டமலை குள்ளப்பநகர் பகுதியை சேர்ந்த தறி தொழிலாளியின் 14 வயது மகள், 6ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது 2 சகோதரிகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சிறுமியின் தாயார் சற்று மனநலம் பாதிக்கப் பட்டு வீட்டில் இருக்கிறார். இதனால் சிறுமி, வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி மிகவும் சோர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரி, சிறுமியிடம் கேட் டுள்ளார். அதில், சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, இதுபற்றி சைல்டு லைனுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா விசாரணை நடத்தினார்.

அதில்,` சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக 24 வயது முதல் 55 வயது வரை உள்ள 12 நபர்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், மத்திய அரசு அதிகாரி உட்பட 11 பேரை போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய் தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>