சில்லி பாயின்ட்...

* ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் 10 ரன் வித்தியாசத்தில் வென்றது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பெற்ற 100வது வெற்றியாகும்.

*சன்ரைசர்ஸ் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் கட்டாய 7 நாள் தனிமைப்படுத்தலை முடித்து விளையாடத் தயாராகி உள்ளார். சன்ரைசர்ஸ் தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

* ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டை காயம் காரணமாக சிறிது பிரச்னை இருந்தாலும், விரைவில் பந்துவீச்சாளராகவும் தனது பங்களிப்பை வழங்குவார்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனர் ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ஐபிஎல் 14வது சீசனில் எந்த அணியையும் வீழ்த்தும் அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி வலுவானதாக அமைந்துள்ளது என்று அந்த அணியின் ஆல் ரவுண்டர் ரஷித் கான் கூறியுள்ளார்.

* ஐபிஎல் பிளே ஆப் சுற்றின்போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இந்த முறையும் 3 அணிகளே மோதும் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 சீசனில் அணிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது கைவிடப்பட்டுள்ளது.

* இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு டெல்லியில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 2 பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா என்று கேட்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவீத ஜப்பானியர்கள் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

* நான் விராத் கோஹ்லியாக இருந்தால், ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்களாக ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜாவை கண்டிப்பாக சேர்ப்பேன்’ என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

* அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடந்த வால்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் டன்கா கோவினிச்சை (மான்டிநீரோ) வீழ்த்தினார். இது அவர் வென்ற முதல் டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டமாகும்.

Related Stories: