மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்ததும் கட்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்த ஏப்ரல் 6க்கு பிறகு மும்முனை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வெறும் ஏமாற்று வார்த்தைகளாக மாறி விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. எனவே, உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: