பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி 9 லட்சம் கோடி இழப்பு

மும்பை: உலக நாடுகள் பலவற்றில் மட்டுமி–்ன்றி இந்தியாவிலும் கொரோனா 2வது அலை உச்சத்தை எட்டி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் நாடுகள் இன்னும் மீளவே இல்லை. அதற்குள் 2வது அலை வேகம் எடுத்திருப்பது சந்தை முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி வந்து விட்டாலும், இன்னும் அனைவருக்கும் இது சாத்தியமாகிவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

 நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகள் அதாவது 3.44 சதவீதம் சரிந்து 47,883.38 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி  524.05 புள்ளிகள் அதாவது, 3.53 சதவீதம் சரிந்து 14,310.80 ஆகவும் இருந்தது. மாலை வர்த்தக முடிவில் சற்று ஏற்றம் கண்டாலும், முதலீட்டாளர்களுக்கு சுமார் ₹9 லபலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை மதிப்பு 2,09,63,241.87 கோடியில் இருந்து 8,77,435.50 கோடி சரிந்து 2,00,85,806.37 கோடியாகி விட்டது. நிதி மற்றும் உலோகம் சார்ந்த பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.

Related Stories: