விசிக யாருக்கும் எதிரி இல்லை: திருமாவளவன் பேட்டி

அவனியாபுரம்: மதுரை விமானநிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்ட சூரியா, அர்ஜூன் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதியும்  நிலமும் வழங்கி, அரசு வேலை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். பாமகவுடன் கொள்கைரீதியான கருத்து வேறுபாடுதான் உள்ளது. விசிக யாருக்கும் எதிரி இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழியாகச் செயல்படும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் சாதி, மத, இனங்களை கடந்தது என்றார்.

Related Stories:

>