×

கேரளாவில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 72 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 20 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Kerala , 5,692 new cases of corona infection confirmed in Kerala
× RELATED கேரளாவில் ரெட் அலர்ட்