ஆரஞ்சு சாக்கோ கேக்

செய்முறை:

Advertising
Advertising

ஓவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் வெண்ணெய் தடவவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஆளி விதை, சர்க்கரை சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய், தயிர், பால், ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மைதா கலவை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு செர்ரி (அ) உலர் திராட்சைத் துண்டுகள், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் ட்ரே அல்லது மோல்டுகளில் மைதா கலவையை ஊற்றவும். இதை அவனுள் வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும். (டூத்பிக்கால் குத்திப் பார்த்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுக்கவும்). ஐசிங் சுகர், ஆரஞ்சுச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தச் சிரப்பை கேக்கின் மேல் தெளித்துப் பரிமாறவும்.