வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த அரசு தயார்..! டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த அரசு தயார் என கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வயது கட்டுபாட்டை நீக்கும்படி மத்திய அரசிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்தேன். வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோன வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் டெல்லி அரசு தயாராக உள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் 65 சதவீதம் பேர் 45 வயதுக்கு குறைவானவர்கள். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண் வேண்டும். குற்றம் சாட்ட வேண்டிய நேரம் இல்லை. டெல்லியில் உச்சகட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு 2020 நவம்பரில் இருந்த உச்சத்தை விட ஆபத்தானது. கொரோனாவை சமாளிக்க லாக்டவுன் ஒரு தீர்வு அல்ல என்று நான் நம்புகிறேன். மருத்துவமனை அமைப்பு சரிந்தால் மட்டுமே அது விதிக்கப்படும்.

தேவையில்லாமல் வீடுகளை விட்டு மக்கள் வெளியே செல்ல வேண்டாம், மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தங்க, சமூக இடைவெளியை கடைபிடியுங்க. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக செல்வதற்கு பதிலாக வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். நோய் தீவிரமாக இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகள் காலியாக இருக்க வேண்டும். அனைத்து படுக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் லாக்டவுன் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: