அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சினி பார்த்தசாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்த கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவுடைய பதவிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக புதிய துணை வேந்தரை நியமிக்கும் வரை வழிகாட்டுதல் குழுவை நியமிப்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி இருந்தன. ஏற்கனவே புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய சிண்டிகேட் குழு கூடி இந்த வழிகாட்டுதல் குழுவை தேர்வு செய்வதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் 3 பேர் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழுவை நியமித்துள்ளார். அந்த குழுவில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ் இடம்பெற்றுள்ளார். தற்போது அண்ணா பல்கலைக்கழத்தில் பதிவாளராக இருக்கக்கூடிய கருணாமூர்த்தியும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய கூடிய ரஞ்சினி பார்த்தசாரதியும் இந்த குழுவில் உள்ளனர். புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை இந்த மூவர் குழு கண்காணிப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: