உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் அலட்சியம்

ஊட்டி: ஊட்டி உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பலரும் முறையாக முக கவசம் அணியாமல் வருவது கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தற்போது துவங்கியுள்ளது. நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை ஊட்டி நகராட்சி மார்க்கெட், உழவர் சந்தை, குன்னூர், கூடலூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மார்க்கெட் பகுதிகளிலும் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தசூழலில் தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், ஊட்டி உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட் போன்றவற்றிற்கு காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பலரும் முறையாக, முக கவசம் அணிவதில்லை.

பெயரளவிற்கு முக கவசம் அணிந்திருக்கும் அவர்கள் சிலர் வாய், மூக்கு மூடி இருக்கும் படி அணியாமல் தாடையில் அணிந்துள்ளனர். சிலர் மூக்கு தெரியும்படி அணிந்துள்ளனர். வியாபாரிகள் சிலரும் இதே போல் அணிந்துள்ளனர். இதனால் கொரோனா பரவ கூடிய அபாயம் நீடிக்கிறது. மேலும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தைகளில் ஒன்றாக உள்ள ஊட்டி உழவர் சந்தையில் தற்போது அதிகளவிலான பொதுமக்கள் அதிகளவில் பொருட்கள் வாங்க கூடுகின்றனர். இதனால் கொரோனா பரவ கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே உரிய கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: