×

திண்டுக்கல் அருகே 8 மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 2 முதியவர்கள் உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே ஆர் கல்லுப்பட்டியை சேர்ந்த தங்கவேல், அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 13 வயது மகள் வீட்டில் தனிமையில் இருந்த அவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள் பெருமாள் மற்றும் குருநாதன் ஆகியோரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் சிறுமையை அடிக்கடி தனியே அழைத்து சென்றது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்ததில் தொடர்ந்து 8 மாதங்களாக பேரும் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 3 போரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Tags : Dindigul , Intimidation and sexual abuse of a girl for 8 months near Dindigul: 3 arrested including 2 elderly people under Pokcho Act
× RELATED அருப்புக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை