மன உறுதியுடன் நிற்கும் விவசாயிகள் : டெல்லியில் கொளுத்தும் வெயிலில் 137வது நாளாக தொடரும் போராட்டம்

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 137வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 137 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் பல்வேறு முறைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.அதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘அரசியலமைப்பு பாதுகாப்பு தினம்’ மற்றும் ‘கிசான் பகுஜன் ஒற்றுமை நாள்’ ஆகியவற்றை அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: