×

ஒரே பெண்ணை காதலிப்பதில் தகராறு வாலிபருக்கு சரமாரி வெட்டு: 4 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (20). இவருக்கும், கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவருக்கும், ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக சமரசம் பேச  விக்னேஷை ஆகாஷ் அழைத்துள்ளனர். அதன்படி அவர், கொடுங்கையூர் விவேகானந்தா நகருக்கு கடந்த 8ம் தேதி இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆகாஷ், விக்னேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஆகாஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விக்னேஷை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ், அவரது கூட்டாளிகள் நவீன் (20), புருஷோத் (19), சூர்யா (19) ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Tags : Dispute in falling in love with the same girl Volleyball cut for teenager: 4 arrested
× RELATED இந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4...