×

பசுமைவழிச்சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் கூட்டு பலாத்காரம் செய்து இளம்பெண் படுகொலை: 3 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது; உடையுடன் எலும்புகூடு மட்டும் மீட்பு

சென்னை: சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அதிகளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் ஒன்றை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. கஞ்சா எங்கு விற்பனை செய்யப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பசுமைவழிசாலையில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகே விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். அப்போது கஞ்சா போதையில் பிடிப்பட்ட வாலிபர் ஒருவர் ரயில் நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம்  செய்து, இளம் பெண்ணை கொலை செய்து பின்னர் உடலை பறக்கும் ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள பயன்படுத்தப்படாத அறையில் வீசி சென்றதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.

முதலில் போலீசார் கஞ்சா போதையில் உளறுவதாக நினைத்தனர், பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வாலிபரை அழைத்து சென்று இளம்பெண் கொலை செய்து வீசப்பட்டதாக கூறப்பட்ட பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் சோதனை செய்தனர். அப்போது போலீசார் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவர் எலும்பு கூட உடையுடன் கிடந்தது தெரியவந்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் உடல் கிடந்த இடம் ரயில்வேவுக்கு சொந்தமான இடம் என்பதால் ரயில்வே போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர்.

பின்னர் ரயில்வே போலீசார் முன்னிலையில் கோட்டூர்புரம் போலீசார் இளம் பெண்ணின் எலும்பு கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா போதையில் தகவல் அளித்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நண்பர் ஒருவர் இந்த இளம் பெண்ணை அழைத்து வந்ததாகவும் அவர் பலாத்காரம் செய்த பிறகு, நாங்கள் கூட்டு பலாத்காரம் செய்தோம் என்றனர். இளம் பெண்ணை அழைத்து வந்ததாக கூறப்பட்ட நபரை தேடி போலீசார் சைதாப்பேட்டை பகுதிக்கு சென்று தேடிய போது, அந்த நபர் கடந்த மூன்று மாதமாக வீட்டுக்கு வராமல்  தலைமறைவாக இருந்து வருவது தெரியவந்தது, இதையடுத்து பிடிபட்ட இரண்டு வாலிபர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Greenway , Teen murdered by gang rape at Greenway flying train station: clues lost after 3 months; Skeleton-only recovery with wear
× RELATED பசுமைவழிச்சாலை பறக்கும் ரயில்...