செல்லூர் ராஜூ கமெண்ட் அதிமுகவில் எடப்பாடி ‘ஹீரோ’ மத்தவங்க ‘டூப்’

மதுரை: மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிமுகவில், ஹீரோ எடப்பாடி பழனிசாமிதான். அவர் மட்டும் டாப். மற்றவர்கள் எல்லாம் டூப்’’ என்றார். அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, ‘‘முதல்வர் விவசாயி என கூறுகிறீர்கள். தற்போது விவசாயிகளுக்கான உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதே. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு, நிருபர்களைப் பார்த்து பெரிதாக கும்பிடு போட்டபடியே, வேகமாக காரில் ஏறி கிளம்பி விட்டார்.

Related Stories:

>