கோவையில் இந்து முன்னணி நிர்வாகியை கொல்ல முயற்சி: கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

கோவை: கோவை சுந்தராபுரம் காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36). இந்து முன்னணி உக்கடம் நகர பகுதி துணை தலைவர். கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன் தினம் இரவு சுந்தராபுரம் பஸ் ஸ்டாப் அருகே பைக்கில் சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.‌ காயமடைந்த ராமகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜவுக்காக தேர்தல் பணி செய்துள்ளார்.‌ போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.‌

தகவலறிந்து பாஜ மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வந்து விசாரித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி, பாஜ, விஷ்வ இந்து பரிஷத் உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று சினிமா பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை வளாகம் வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்களை இந்து அமைப்பினர் வழிமறித்து தாக்கினர். அவர்கள் வந்த 3 பைக்குகளையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: