லாரி பள்ளத்தில் விழுந்து 12 பேர் பரிதாப பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

எட்டாவா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் பிரேந்திர சிங் பாகேல் என்பவர் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் லக்னோவில் உள்ள கல்கா தேவி கோயிலுக்கு தனது குடும்பத்தினர் 70 பேரை லாரியில் அழைத்து சென்றார். அப்போது எட்டாவா மாவட்டத்தில் உள்ள உடி கிராசிங் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சக்கர் நகர் பகுதியில் உள்ள 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 43 பேரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

பலியான 12 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Related Stories: