மகாபாரத தொடரில் நடித்த மூத்த நடிகர் கொரோனாவால் மரணம்

லூதியானா: மகாபாரதம் தொடரில் நடித்த மூத்த பஞ்சாபி நடிகர் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த மூத்த பஞ்சாபி நடிகர் சதீஷ் கவுல் (74), கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் மருத்துவமனையில் இறந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர், மகாபாரதம் இதிகாச தொலைக்காட்சி தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

மேலும், 300க்கும் மேற்பட்ட இந்தி, பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். ‘பியார் தோ ஹோனா ஹி தா’, ‘அத்தை எண் 1’, ‘விக்ரம் அவுர் பெடால்’ உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை. கடந்த ஆண்டு மே மாதம் அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘நாடு தழுவிய ஊரடங்கால் திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் மருந்துகள், மளிகைப் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக போராடுகின்றனர். எனவே திரைப்படத் துறைக்கு அரசு உதவ வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

Related Stories:

>