தடுப்பூசி போடும் போது போனில் பேசிய நர்ஸ் சஸ்பெண்ட்

விஜயநகரம்: பெண் ஒருவருக்கு தடுப்பூசி போடும் போது செல்போனில் பேசிக் கொண்டு தடுப்பூசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பார்வதிபுரம் நகராட்சியின் கீழ் உள்ள ஜகநாதபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அப்போது அந்த மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஹேமா என்பவர், தடுப்பூசி போட்டுக் கொள்ள பெண்ணை அமரவைத்து தடுப்பூசி போட்டார். ஆனால், அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே தடுப்பூசி போட்டார். இதனை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக ஊடகங்களில் பதிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

அதையடுத்து பணியின் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்ட ெசவிலியர் ஹேமா மீது மாவட்ட மருத்துவ அதிகாரி ரமணா குமாரி நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட செவிலியர் ஹேமாவுக்கு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ரமணா குமாரி கூறுகையில், ‘பணியில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் ேஹமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.

Related Stories: