தடுப்பூசி போட்டவங்களுக்கு கொரோனா எப்படி வருது?.. 4 கேள்விகளை நச்சுனு கேட்ட அகிலேஷ்

லக்னோ: தடுப்பூசி போட்டவர்களுக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பது உள்ளிட்ட 4 ேகள்விகளை உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் எழுப்பி உள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் ெகாள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள கந்தலா சமூக  சுகாதார மையத்திற்கு சில பெண்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு கொரோனா  தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் (நாய்க்கடி) எதிர்ப்பு ஊசி போடப்பட்டது. ஒரு பெண்ணின்  நிலைமை  கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரிப்பது ஏன்? என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போட்டது குறித்தும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ், நேரடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘1. கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க் கடி ஊசி போடப்பட்டது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 2. தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எப்படி மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது? 3. குறைவாக பரிசோதனை செய்யப்படுவது ஏன்? அறிக்கையை தாமதப்படுத்துவது ஏன்? 4. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஏன்?’ என்று 4 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Related Stories:

>