தாக்குதலுக்குள்ளான மருத்துவர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்திய ஆட்சியர்: தஞ்சையில் நெகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சையில் தாக்குதலுக்குள்ளான மருத்துவர்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்திய தஞ்சை ஆட்சியரின் செயல் மருத்துவர்களை நெகிழ வைத்துள்ளது. தஞ்சை மாவட்டம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் ராகவன். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், இருவரையும் நண்பர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனுக்கும், காயமடைந்தர்களின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், மதுபோதையில் இருந்து அவர்கள் பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனை கைகளாலும், நாற்காளிகளை தூக்கி வீசியும் தாக்கினர்.

மேலும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இந்த நிலயில் தாக்கதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி பாரதிராஜன், கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், நள்ளிரவு 12 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, மருத்துவர்களை சமாதானப்படுத்தினார். உங்களோட மன வேதனையை என்னால் உணர முடியுது.

கொரோனா நேரத்துல் நீங்கள் செய்யும் பணி மிகவும் உயர்வானது. இந்த சம்பவத்தால் நீங்க மனச்சோர்வு அடைஞ்சிடக்கூடாது. மக்கள் நலனுக்காக, இதை நாம சகிச்சிக்கணும். பொறுத்தக்கணும். உங்க மேல தாக்குதல் நடத்திய நபர்கள் மேல கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்படும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததுக்காக நான் உங்கக்கிட்ட வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்’ என ஆறுதலான வார்த்தைகளால் சமாதானப்படுத்தினார். இது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: