கேரள முதல்வரின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது; தொடர்ந்து சிறப்பான சிகிச்சை... மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

திருவனந்தபுரம்: கேரள முதல்வரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவ குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன் மகள் வீணா விஜயனுக்கு கடந்த 6-ம் தேதி, கேரள சட்டப்பேரவை தேர்தலன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வழக்கமாக, எல்லா தேர்தல்களிலும் வீணா, தந்தை பினராய் விஜயனுடன் தான் வாக்களிக்க செல்வார். ஆனால், கொரோனா பாதித்ததால் இந்த முறை அவர் மாலையில் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் முதல்வரின் மனைவி கமலாவுக்கு தொற்று பாதிப்பு இல்லை. இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிகிச்சை அளிக்க 10 பேர் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பினராயி விஜயனுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் முதல்வரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனிடையே துபாயில் இருந்து தங்கம் கடத்திய சொப்னா தலைமையிலான கும்பல், இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தி உள்ளனர். இது தொடர்பாக சுங்க இலாகா விசாரணை நடத்தியது. அதில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்காகவும், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த 9ம் தேதி சுங்க இலாகா அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பிலும் சுங்க இலாகா சோதனை நடத்தியது. இந்த நிலையில் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் கூடுதல் விசாரணை நடத்த சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால் அவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories:

>