ஹைவேவிஸ் அணைப்பகுதியில் ஒற்றையானை நடமாட்டம்: சுற்றுலாப்பயணிகள் அச்சம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் ஏழு மலை கிராமங்களைக் கொண்ட பேரூராட்சியாக உள்ளது. ஏற்கனவே மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், ஹைவேவிஸ் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இங்கு தேயிலை, காப்பி, மிளகு, ஏலம் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட ஏழுமலை கிராமங்களில்  8500க்கும் மேல் பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர் கள் வசித்து வருகின்றனர். இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, அரிய வகை  பாம்பு இனங்கள், முதலை, கரடி, சிங்கவால் குரங்கு, மயில் உள்ளிட்ட பல வசித்து வருகின்றன.

தற்போது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழு மலைக்கிராமங்களுக்கு குடிநீர்  வனவிலங்குகள் வருகின்றன. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை ஹைவேவிஸ் அணைப்பகுதி மெயின்ரோட்டில் ஒற்றை யானை உலவியது. இதைக் கண்ட பொதுமக்கள் தப்பித்து ஓடினர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில் ஒன்றையானை சுற்றுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக அந்த யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: